Skip to main content

Posts

Showing posts from July, 2018
சமீபகாலமாக தமிழகத்தில் குழந்தைைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க நம்முடைய குழந்தைகளுக்கு பெற்றோராகிய நாமே கற்றுத்தருவோமா? #Good_touch #Bad_touch பற்றிய புரிதலை நம்முடைய குழந்தைகளுக்கு புரியும்படி பயிற்றுவிக்க இந்த காணொளியைப் பகிருங்கள்!

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்? மம்தா-சந்திரபாபு நாயுடு பேச்சு!

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக (தீர்மானத்துக்கு ஆதரவாக) ஓட்டுப்போட்டு இருப்பார்கள் என்று அப்போது அவர் கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-பாரதீய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்…

பாஜகவின் வியூகங்கள்! கிடைக்குமா வெற்றி?

நம்நாடு செய்திகள் இணைய தளம்

மக்களவையில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பாஜக திடீரென ஏற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சித் தலைவர் அமித் ஷா மாற்றியுள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.

இதன்படி, தெலங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

நாடாளுமன்ற கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முயன்றபோது, ஆளும் கட…

உறுப்பினர் சேர்க்கைக்கு உயிர் கொடுப்பார்களா? அஇஅதிமுக இளம் ஆதரவாளர்கள் வேதனை!

அதிமுகவின் தலைமைக் கழகத்தில் நேற்று (ஜனவரி 29) நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர்.கட்டுக் கட்டாக புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை பன்னீர், பழனிசாமியிடம் இருந்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பெற்றுச் சென்றனர். தலைமைக் கழகத்தில் உற்சாகமாக நடந்த இந்த கூட்டத்துக்குப் பின் உடனடியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்த பதிவுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்,.அப்போது பின்னூட்ட்டங்களாக வந்த கமெண்ட்டுகளில், ‘’நான் மதுரையை சேர்ந்தவன். உறுப்பினராக யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?’, ‘நான் ஆர்.கே.நகரை சேர்ந்தவன்.அதிமுகவில் உறுப்பினராக வேண்டும் என்ன வழி?’ என்றெல்லாம் கேள்விகள் முளைத்தன. ஆனால் அவற்றுக்கு பதில் சொல்வார் இல்லை.தலைமைக் கழக நிகழ்ச்சி முடித்துவிட்டு பேஸ்புக்கில் மேய்ந்துகொண்டிருந்த நம்மிடம் திரும்பினார் ஓர் இளம் அதிமுக தொண்டர்.‘’சார்… மறுபடியும் த…

மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.அதன்பின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலங்கு தேசம் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டு ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதை மக்களவை சபாநாயகர் ஏற்கவில்லை.இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரிலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.இதன்படி, தெலங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதே மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.மக்களவை தொடங்கியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அ…

இன்று துவங்கும் "பார்லி மழைக்கால கூட்டத் தொடர்!! முழங்குமா? முடங்குமா?

பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, பார்லி., கூட்டத்தொடரை, மக்களுக்கு பயனுள்ளதாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை கூட இருக்கிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.மக்களவை பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் ஒற்றுமை…

மலைபோல பணக்குவியல்? மலைத்துப்போன அதிகாரிகள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.
தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற 5 நட்சத்திர ஓட்டலும்…

Sports Section

Culture News

recent

Latest News

river

Latest Posts

Follow us on facebook

About News16

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.

Category 4

Sidebar Ads

soccer

mualaf

Random Posts

Recent Posts

Recent in Sports

Video Of Day

Video Example

Recent

Comments

teaser

Fashion

Connect With us

Breaking News

About Me

authorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Ad 728x90

Sidebar Ads

Catch on Facebook

Games