Skip to main content

Posts

Showing posts from August, 2018

அஇஅதிமுக ஆட்சியையோ, பாஜக ஆட்சியையோ வீட்டுக்கு அனுப்ப இவர்களால் முடியாது! தயாநிதி அழகிரி!

வருகிற செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியை யாருக்கும் எதையும் தெரிவிக்க நடத்தவில்லை. மறைந்த தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தவே என் தந்தை இதை நடத்துகிறார். வேறெதுவும் இல்லை. எங்கள் பலத்தைக் காட்ட நடத்தப்படும் பேரணியாக நினைக்கிறார்கள் என்றால் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல. நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தொடர்ந்து கூறியதாவது!"என்னை திமுகவில் மீண்டும் சேர்க்கவில்லை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எனது தந்தை பேசியுள்ளது" அவரது பார்வை. அது ஒருவகையில் உண்மையும் கூட. திமுகவின் நிரந்தரத் தலைவர் கருணாநிதி மட்டுமே புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி  நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கு பங்காற்றியிருந்தாலும் எனது தந்தை புறக்கணிக்கப்படுகிறார்.
எனது தந்தையின் திட்டம் என்னவென்பதை அவர் அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார். மீண்டும் தான் கட்சியில் இணைய வேண்டும் என்று பேசி வருகிறார். அவரை கட்சியில் சேர்த்து, நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது பற்றிதான் திமுக யோசிக்க வ…

கலகலக்கப் போகும் மெரினா? அழகிரி திட்டம்!

கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், ‘தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்’ என, சூளுரைத்தனர்.ஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உதவியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.’தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்’ என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.மதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில்…

விரைவில் தமிழகத்தில் பொதுத்தேர்தல்? மத்திய அரசு தீவிரம்!

சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும்  வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கடந்த செவ்வாய்க்கிமை அன்று பேசிய போது
''இந்தியாவில் 29 மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் வைப்பதென்பது சாத்தியமில்லை. அரசியலமைப்பிலும் சட்டத் திருத்தம் கொண்டுவராமல் இதை நடத்த முடியாது'' என்று தெரிவத்தார். முன்னதாக "ஒரேநாடு ஒரே தேர்தல் " குறித்து சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் "நாம் இப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வகுத்து கொடுத்த தேர்தல் முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதில் `நம்பிக்கை இல்லா தீர்மானம்` கொண்டு வருவதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல, ஒரு மாநிலத்தில் கொண்டு வந்து ஆட்சிக் கவிழும் பட்சத்தில், இப்போது முன்வைக்கப்படுகிற `ஒரே தேர்தல்` முறையில…

#ஸ்டெர்லைட் ! தமிழக அரசு மேல்முறையீடு?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிடப்பட்டது என்றும், இந்த ஆணையை எதிர்த்த ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும், எனவே மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதை ஏற்க மறுத்த நீதிபதிக…

செயல்படாத செயல்தலைவர்? முக அழகிரி பகீர் பேச்சு!

சென்னையில்,நேற்று ஆங்கில, ‘டிவி’ சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:

உங்கள் ஆதங்கம் தான் என்ன?

எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.

மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?

என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.

கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. ‘செய்தி தொடர்பாளர்கள் யாரும், ‘டிவி’க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது’ என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?

கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?

இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.

அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?

அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம்…

இன்று கூடும் #திமுக_செயற்குழு ? பரபரக்கும் #அறிவாலயம்!

இன்று கூடும் #திமுக_செயற்குழு? பரபரபக்கும் அறிவாலயம்!கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி தூக்குவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதைத் தொடங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கருணாநிதி மறைந்த 7-ஆவது நாளிலேயே அழகிரி தனது எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறார்.

ஸ்டாலின் கலக்கம்?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நினைவிடத்துக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம்’ தொடங்கியது போன்று, அழகிரியும் இப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் தனது பாணி தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என்பக்கம்தான் உள்ளனர். என் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பேன்’ என்று அழகிரி கூறியுள்ளார். இதனால், கருணாநிதி இல்லாத மு.க.ஸ்டாலினை முதன்மையாகக் கொண்ட திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

தென்மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பை வகித்தவர் மு.க.அழகிரி. அந்த மாவட்டங்களைப் பொருத்தவரை அழகிரி எடுப்பதே முடிவு எனும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போது அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால்…

திக்.... திக்.... திமுக! நாளை நடக்கப் போவதென்ன? சிறு பார்வை!

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் … மேலும் தெரிந்து கொள்ள http://namnadu.news/2018/08/13/dmkwar/

மீண்டும் "தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி? உச்சகட்ட குழப்பத்தில் திமுக!

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
அன்பழகன் இல்லத்தில்…: சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள க.அன்பழகன் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உடன் வந்தனர். க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சுமார் 20 நிமிஷங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: திமுக அவசர செயற்குழு கூட்டம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட உள்ளது. கூட்டத்துக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.இரங்கல் தீர்மானம்:

செயற்குழுக் கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது: கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரி…

தவறு செய்கிறாரா பொன்.மாணிக்கவேல்? அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்!

காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார். சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா? விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.சங்கங்களின் கூட்டமைப்பு சார…

அமமுக வில் சூறாவளி? தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா?‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்னிச்சையாகக் கழகத்தைச் சார்ந்தவர் போல, விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த தேனி கர்ணன் அவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் கழகத்திற்கு எதிரான விஷமத்தனமான செய்திகளைப் பரப்பி வருகிறார் எனத் தெரியவருகிறது. ஆகவே, கழகத் தோழர்கள் தேனி கர்ணனுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ -இப்படி ஒரு அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வந்த தேனி கர்ணன் என்பவரைத்தான் ஒதுக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். என்ன நடந்தது என்பதைக் கர்ணன் ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.

அத்தனைக்கும் காரணம், தினகரன் உதவியாளரான ஜனார்த்தனன்தான். கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என கர்ணனிடம் டிமாண்ட் வைத்தார் ஜனார்த்தனன். ஆனால், கர்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘சொந்தக் காசை செலவு பண்ணிட்டு வந்து அண்ணனுக்கா…

Sports Section

Culture News

recent

Latest News

river

Latest Posts

Follow us on facebook

About News16

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.

Category 4

Sidebar Ads

soccer

mualaf

Random Posts

Recent Posts

Recent in Sports

Video Of Day

Video Example

Recent

Comments

teaser

Fashion

Connect With us

Breaking News

About Me

authorHello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →

Ad 728x90

Sidebar Ads

Catch on Facebook

Games